27 நட்சத்திரங்களும் அவற்றுக்குரிய தாவரங்களும்

1). அஸ்வினி

மூலிகை  -எட்டி

தாவரவியல் பெயர் - STRYCHNOSNUXVOMICA

நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள் -

பக்கவாதம் , காக்கை வலிப்பு , சன்னி , கடி நஞ்சு , கரப்பான் ,முள்ளந்தண்டு வலி.



2).  பரணி

மூலிகை-நெல்லி

தாவரவியல் பெயர்-PHYLLANTHUS EMBLICA

நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்

பீனிசம், வெறி , வாந்தி , மயக்கம், தலைச்சுற்றல் மலக்கட்டு, பிரமேகம் .




3).கார்த்திகை

 மூலிகை-அத்தி

தாவரவியல் பெயர்- FICUS RACEMOSA

நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்

 மூலவாயு, மூலக்கிராணி, இரத்த மூலம், வயிற்றுக்கடுப்பு , வெள்ளை வாத நோய், மலக்கட்டு




4).ரோகிணி 

  மூலிகை-நாவல்

தாவரவியல் பெயர்- SYZYGIUM CUMINII

நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்

இருமல், பெரும்பாடு , ஈளை வாதம், கரப்பான் , நீரிழிவு, குருதிக் கழிச்சல், நீர் வேட்கை.




5). மிருகசீரிடம்

மூலிகை-கருங்காலி

தாவரவியல் பெயர்-  ACACIA SUNDRA

 நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்

பித்தகுன்மம், வெள்ளை, பெருவயிறு, இருமல், திமிர்வாதம்,நீரிழிவு, பெரு நோய் .




6) . திருவாதிரை

மூலிகை-செஞ்சந்தனம்

 தாவரவியல் பெயர்- PTEROCARPUS SANTALINUS

நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்

கரப்பான் , மேக நீர் , ஆண்மைக்குறைவு




7). புணர்பூசம் 

மூலிகை- மூங்கில்

 தாவரவியல் பெயர்-BAMBUSA ARUNDINACEA

நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்

குருதியிழல், இடைவிடாத சுரம், குடற்சூலை, சூதக்கட்டு , வாதம் இரைப்பு , சொறி சிரங்கு,  ஆண்மைக்குறைவு




8). பூசம்

மூலிகை-அரசு

தாவரவியல் பெயர்- FICUS RELIGIOSA

நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்

வன்மை, சுரம், முக்குற்றம், பித்த வெடிப்பு, மலக்கட்டு, சொறிசிரங்கு




9). ஆயில்யம்

மூலிகை-புன்னை

தாவரவியல் பெயர்- CALOPHYLLUM INOPHYLLUM

நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்

நீங்காமேகம், முப்பிணி, கரப்பான்,சொறிசிரங்கு, செவிப்புண், சன்னி , வாதம், இசிவு




10). மகம்

மூலிகை-ஆல்

 தாவரவியல் பெயர்-  FICUS BENGHALENSIS

நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்

மேகம், வயிற்றுக் கடுப்பு,  மலக்கட்டு, வாய்ப்புண்,  நீரிழிவு,  ஆண்மைக்குறைவு




11). பூரம்

மூலிகை-பாலாசு

 தாவரவியல் பெயர்-SARTOCARPUS HETEROPHYLLUS

 நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்

அண்டவாதம், முக்குற்றம், குடைச்சல், வயிற்று நோய், கீழ் வாதம் மார்பு வலி,படை





12). உத்திரம்

மூலிகை-அரளி

 தாவரவியல் பெயர்-  NERIUM OLEANTER

நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்

நஞ்சு, சுரமூர்ச்சை, வெள்ளை வெட்டை, குன்மம், நரம்புச் சிலந்தி




13). அஸ்தம்

மூலிகை-வேலம்

 தாவரவியல் பெயர்-ACACIA LEUCOPHLOEA

நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்

மூலவாயு, மூலக்கிராணி , இரத்த மூலம்,வயிற்றுக் கடுப்பு, வெப்பு , புண் ,மலக்கட்டு




14). சித்திரை

 மூலிகை-வில்வம்

 தாவரவியல் பெயர்-AEGLE MARMELOS

நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்

மேகம், மந்தம், குன்மம், கண் இருள், சுக்கில நட்டம், உடல்கடுப்பு





15). சுவாதி

 மூலிகை-நீர் மருதமரம்

தாவரவியல் பெயர்- TERMINALLA ARJUNA

நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்

 நீரிழிவு, வெள்ளை, மயக்கம், இருமல், நீர் வேட்கை , பெருநோய் புழுநோய்,     
   
 வயிற்று நோய்




16). விசாகம் 

  மூலிகை-விளா

தாவரவியல் பெயர்-FERONIA ELEPHANTUM

நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்

இருமல், இரைப்பு, சுவையின்மை, வெறி,  பித்தம், நீரிழிவு, வெள்ளை பெரும்பாடு.



17). அனுசம்
மூலிகை-மகிழம்

  தாவரவியல் பெயர்-  MIMUSOPS ELENGI

   நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்

மேகச்சூடு, நீர் வேட்கை , இளைப்பு, வெட்டை, நாட்பட்டபுண்




18). கேட்டை

   மூலிகை-பிராயன்(குட்டிப் பலா )

 தாவரவியல் பெயர்-STREBLUS  ASPER

 நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்

கடுவன், குடல்வாயு, பொருமல் , பல்வலி, உடல் மெலிவு




19). மூலம்

மூலிகை-மா

தாவரவியல் பெயர்-MANGIFERA INDICA

 நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்

 ஆண்மைக்குறைவு, சீதக்கழிச்சல், குருதிக் கழிச்சல் கடுப்பு , சூடு ,பெரும்பாடு, வாந்தி, வெள்ளை





20). பூராடம் 

மூலிகை-வஞ்சி

தாவரவியல் பெயர்-SALIX TETRASPEAMA

  நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்

 நீர் வேட்கை, நீரிழிவு, புண், திமிர்வாதம், மேகவெட்டை சுரம் , அஸ்திசுரம் , வாதம்



  

21). உத்திராடம்
 மூலிகை-சக்கைப்பலா

  தாவரவியல் பெயர்-ARTOCARPUS INCISA

  நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்

 வயிற்றுப்புழு, உடல்வலி, படர்தாமரை, வயிற்று வலி, கரப்பான், புற்று





22). திருவோணம்

   மூலிகை-எருக்கு

   தாவரவியல் பெயர்-CALOTROPIS GIGANTEA

நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்

ஐயநோய், ஐவகை வலி , மூட்டு, வீக்கம், வளி நோய்  அக்கினி மாந்தம் , மலக்கட்டு





23). அவிட்டம்

 மூலிகை-வன்னி

தாவரவியல் பெயர்- PROSOPIS SPICIGERA

நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்

நஞ்சு,  வளி நோய் , சன்னி, முப்பிணி, ஐயப்பெருக்கு, சொறி, கபம்





24). சதயம்

 மூலிகை-கடம்பு

தாவரவியல் பெயர்-ANTHOCEPHALUS CHINESSIS

நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்

 என்பு சுரம், குளிர் சுரம், பிடிப்பு, கண்நோய், வளி நோய்  நீரேற்றம், வாய்ப்புண், தொண்டைப்புண்



25). பூரட்டாதி 
  மூலிகை-கருமருது

தாவரவியல் பெயர்-TERMINALIA TOMENTOSA

நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்

 ஆண்மைக்குறைவு, சீதக்கழிச்சல், குருதிக் கழிச்சல் , கடுப்பு, சூடு, பெரும்பாடு,வாந்தி, வெள்ளைப்படுதல்





26). உத்திரட்டாதி

  மூலிகை-வேம்பு
     
 தாவரவியல் பெயர்-  AZADIRACHTA INDICA

நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்

வயிற்றுப்புண், பெருநோய், நஞ்சு, சுரம், அம்மை,  சொறி, சிரங்கு, பித்தப்பை, காமாலை





27). ரேவதி 

   மூலிகை-இலுப்பை

தாவரவியல் பெயர்- MADHUCA LONGIFOLIA

 நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்

இடுப்புவலி, கடுவன், கரப்பான், வீக்கம், திரிதோடம், தீச்சுரம், நீர்வேட்கை .