மொட்டை மாடியில் தோட்டம் அமைத்தல்

தா என்று கேட்காமலே கடவுள் நமக்கு கொடுத்த வரம் தாவரம். இந்த தாவரத்தில் தான் எத்தனை வகைகள்? உணவுக்கு, மருந்துக்கு, அழகுக்கு, அழிவிற்கு என அனைத்திற்கும் உலகத்தில் மனிதன் தாவரங்களைச் சார்ந்து தான் வாழ்ந்தாக வேண்டும். மனிதனின் உடல் எடையில் 70 % தண்ணீர் தான் நிறைந்துள்ளது, எனவே அவன் தன் வாழ்நாளில் ஆரோக்கியமாக வாழ
நஞ்சற்ற எளிய பழங்கள் காய்கறிகள் , கீரைகள், சிறு தானியங்கள் இவற்றை உணவாக பெற வேண்டும் .

விவசாய விளைநிலங்கள் வீட்டுமனையிடமாக அறுவடையாகிக் கொண்டு வருகிறது.  தேர்ந்த விவசாயியின் நிலம் விவசாய அக்கறையற்ற தொழிலதிபரின் கைக்கு மாறிக் கொண்டிருக்கிறது. விளைநிலங்களில் இரசாயனம் அதிகமாக உபயோகிப்பதால் விளைச்சல் தராமல் மலட்டு நிலங்களாகி வருகிறது. ஏற்கனவே விளைச்சல் தராத களிமண் நிலங்கள் 7 பகுதிகளாக நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களைத் தக்க வைக்கும் திறன் குறைந்த நிலம் 24 இலட்சம் ஹெக்டார் கரிசல் மண்வகைகளில் சோடியம் அயனி அதிகம் இருப்பதால் அடிமண் இறுகி காணப்படும் நிலங்கள் தமிழ்நாட்டில் ஏறத்தாழ 10 இலட்சம் ஹெக்டார் . செம்மண் நிலங்களில் இரும்பு மற்றும் அலுமினிய கூழ்ம  ஆக்சைடுகளால் மண் துகள்கள் ஒன்றிணைக்கப்பட்டு மேல்மண் இறுகிவிடும் நிலையில் உள்ள பரப்பளவு  ஏறத்தாழ 4 இலட்சம் ஹெக்டார் . நெல் சாகுபடியை தொடர்ந்து செய்வதால் மண் தனது திடத் தன்மையை இழந்து வரும் நிலம் ஏறத்தாழ 25,000 ஹெக்டார் . அடிமண்ணில் பாறைகள் தென்பட்டு , மேல்மண் ஆழமற்ற நிலங்கள் ஏறத்தாழ ஒரு இலட்சம் ஹெக்டார் . 




பருவம்  மாறி  மலைபெய்தல், விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்காமை , இப்படி இயற்கையின் கணக்கை ஈடு செய்து வளர்ச்சி காணாது நவீன கம்ப்யூட்டர் யூகங்களாக மாறிவரும் சூழ்நிலை , உழைக்காமல் உடனடியாக பணம் சம்பாதித்து பந்தா வாழ்க்கை  வாழ வேண்டும் என்ற எண்ணமும் , சிந்தனையும் அளவுக்கு மீறி விளைந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலை மாற்றி இனி வரவிருக்கும் நூற்றாண்டில் அவரவர் வீட்டில் இருக்கின்ற இடத்திலேயே , சந்து , பொந்து , மொட்டை மாடியில் காய்கறிகள் , கீரைகள் , மற்றும் அனைத்து உணவு , மருத்துவச்செடிகளை வளர்த்து பலனை எடுக்கத் தெரிந்தவரே நிறைவுடன்   வாழ்க்கையை  எதிர்கொள்ளத் தகுதியுடைவரா வார். எனவே  ஒவ்வொருவரும் தம்  வீட்டின் மொட்டை மாடியில் காய்கறிகள் ,கீரைகள் , பழங்களை , மருத்துவச்செடிகளை வளர்க்கக் கற்றுக் கொள்வோம் .