அணிந்துரை

"வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்

   மற்றைய எல்லாம் பிற "


மாறிவரும் நாகரீக உலகில் வசிப்பதற்கு இடமிருந்தால் போதும் , காணி நிலம் கூட வேண்டாம் என இன்றைய தலைமுறை எண்ணத் தொடங்கியிருக்கிறது .
விளைநிலங்கள் எல்லாம் உறைவிடங்காளாகி வருகின்றன. நெல் விளையும் பூமியெல்லாம் பொன் விளையும் வீட்டடி மனைகளாகி வருகின்றன. நாம் விரும்பும் காய்கனிகள் மற்றும் மூலிகைகள் என்கிருந்தோ இறக்குமதி செய்யப்பபடுகின்றன. இரசாயன உரங்களும் பூச்சி கொல்லி மருந்துகளும் அளவுக்கு மீறி பயன்படுத்தப்பட்டு நாம் உண்ணும் உணவை நஞ்சு கலந்து "உணவே மருந்து மருந்தே உணவு " எனும் பழமொழியை "நஞ்சே உணவு " உணவே நஞ்சு " என்று மாறிவிட்டது.


இந்நிலையில் ,  மனத்திட்பம் நிறைந்த நகரத்தில் உள்ளவர்கட்கு ஒரு புதிய உத்தியை கையாள வந்துள்ளார் திரு .இன்னாசிமுத்து . நமது காய்கறிகளையும், நாம் உபயோகப்படுத்தும் வீட்டு மூலிகைகளையும்  நம் வீட்டு மாடியிலே பயிர் செய்வோம் என அறைகூவல் விடுத்து செயல்படுத்தும் முறைகளையும் எளிதில்விளக்கி வருகிறார்இச்சிறிய பணி ஜப்பானியர்களின்  திறமையை நினைவூட்டுகிறது . அன்மையில் மொட்டை மாடியில் நெல் விளைவித்து சாதனை புரிந்துள்ளார்கள்.


இவரது சிறிய , இல்லை ...சீரிய முயற்சியை  நகரமெல்லாம் கடைப்பிடிக்க வேண்டும். வீட்டு மூலிகைத் தோட்டம் , வீட்டுக்காய்கறித்தோட்டம் என புதிய
  முயற்சிகளை பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இன்றளவும் செய்து வருகின்றன . அவையெல்லாம் கிராமப்புறங்களில் இன்றும் பெண்களிடையே ஆர்வமுள்ள ஒரு முயற்சியாக  மாறிவருகிறது. மேல் மாடியை வடகம் உலர்த்துவதற்கும் , துணிகளை உலர்த்தும் இடமாக மட்டுமே கருதி விடாமல், காய்கறி மற்றும் மூலிகை பயிரிடும் தோட்டங்களாக மாற்ற வேண்டும். இதனால் இரசாயன உரமிடத் தேவையில்லை. பூச்சி கொல்லி மருந்தடிக்க வேண்டாம் , பாரம்பரிய முறைகளை எளிதில் கையாண்டு நம் இல்லத்திற்கு
  
தேவையான காய்கறி   மற்றும் மூலிகைகளை இயற்கை முறையில் விளையச்செய்து பெறலாம் .


     திரு. இன்னாசிமுத்துவின் இந்த உன்னதமான  குறிக்கோள் நிச்சயம் நிறைவேறும் என்று உறுதிபட கூறுகிறேன்.

வாழ்க அவரது சிறந்த முயற்சி.