மாடிச் சூழ்நிலைகள்

 நகர்  புறங்களில் வீட்டைச் சுற்றி செடிகள் நட போதிய இடம் இல்லாததால் மாடியில் அமைக்கும் முறை  பரவிக்கொண்டு வருகிறது. தரையில் செடிகள் வளர்ப்பதற்கும், மாடியில் செடிகள் வளர்ப்பதற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகளை உணர்ந்து கொள்ள வேண்டும் .


1) . மாடியில் வளர்க்கும் செடிகளுக்கு குறைந்த அளவு மண்  தான்  கிடைப்பதால் செடிகள் ஆழமாக வேர்விட்டு வளரும் படியாக அதே சமயம் எடை குறைந்த மட்கிய இலை , தென்னை நார் கழிவுகள் , மட்கிய சாம்பல் , எரு , தவிடு  ஆகியவற்றை சேர்க்க வேண்டும் .


2) . ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பதால் அடிக்கடி  இயற்கை , செயற்கை  உரங்கள் மூலம் ஊட்டச்சத்து கொடுக்க வேண்டும்.


3). வெயில் , வெளிச்சம் , காற்று  அதிகமாக இருப்பதால் நிழல் பந்தல் , அல்லது எளிய தடுப்புகள் அமைக்க வேண்டும் .


4). மண்ணில் ஈரம் விரைவில் காய்ந்து விடுவதாலும் , காற்றில் ஈரப்பதம் குறைவாக இருப்பதாலும்  அடிக்கடி தண்ணீர்  ஊற்றி (அல்லது ) தெளித்து பாதுகாக்க வேண்டும் .


5). மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காது . ஆனால் மண்ணிலுள்ள சத்துக்கள் கரைந்து வெளியேறிவிடும் . அதனால் கண்ணாடி சீட்டுக்கள் , அல்லது பாலிதீன் சீட்டுக்களால் ஆன பந்தல் அமைக்கலாம்.


6). கடுமையான வெயில் , காற்று , மலையை தாங்கி  வளரக்கூடிய செடிகளை வளர்க்கலாம்.


7). மாடியில் செடிகள் வளர்ப்பதற்காக எவ்வளவு எடைவரை ஏற்றலாம் என்பதை துல்லியமாக கணித்துக் கொள்ள வேண்டும். அதிக எடைகொண்ட மண்கலவையை பீம் அல்லது அஸ்திவாரத்திலிருந்து எழுப்பப்பட்டுள்ள சுவர் கான்கிரீட் மேல்  இணையும் இடத்தின் மேல் வைக்கலாம். எடை குறைந்த மண்  உரகலவையை மற்ற காலியிடங்களில் பரவலாக வைக்கலாம்.   


8). மாடியில் செடிகள் வளர்க்க விரும்புவோர், மாடியில் நீர் உட்புகாதவாறு  முன்னெச்சரிக்கையுடன் வாட்டர் ப்ரூப் கலந்து , தளம் அமைத்தோ , தட் டோடுகள் பதித்த பிறகோ , தண்ணீர்  உறிஞ்சாத பொருளினால் மெலுகியோ,
அல்லது பாலிதீன் சீட் விரித்தோ , செடி வளர்க்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.


9). எளிதாக  மாடிக்கோ, பால்கனிக்கோ ஏறிச் செல்லுமாறு பார்வையிடவோ , தண்ணீர் கொண்டு செல்ல ஏதுவாக படியமைப்புகள் இருக்க வேண்டும்.


10). நாம் விரும்பி உண்ணக்கூடிய , உபயோக்கிக்கக் கூடிய  புல் , செடி, கொடி , மரவகைகளை பட்டியலிட்டு திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.



     இனி மாடியில் மேற்கண்டபடி அனைத்து தயாரிப்பு வேலைகள் முடித்தவுடன் புல்தர ,கீரைகள் ,காய்கறிகள்,அழகுசெடிகள் , மூலிகைசெடிகள், மரங்கள்  வளர்க்க ஏற்ற தகவமைப்புகள் பற்றிப் பார்ப்போம் .