எளிய முறையில் மாடியில் காய்கறி தோட்டம் அமைத்தல்

தா என்று கேட்காமலே கடவுள் நமக்கு கொடுத்த வரம் தாவரம். இந்த தாவரத்தில் தான் எத்தனை வகைகள்? உணவுக்கு, மருந்துக்கு, அழகுக்கு, அழிவிற்கு என அனைத்திற்கும் உலகத்தில் மனிதன் தாவரங்களைச் சார்ந்து தான் வாழ்ந்தாக வேண்டும். மனிதனின் உடல் எடையில் 70 % தண்ணீர் தான் நிறைந்துள்ளது, எனவே அவன் தன் வாழ்நாளில் ஆரோக்கியமாக வாழ
நஞ்சற்ற எளிய பழங்கள் காய்கறிகள் , கீரைகள், சிறு தானியங்கள் இவற்றை உணவாக பெற வேண்டும் .

விவசாய விளைநிலங்கள் வீட்டுமனையிடமாக அறுவடையாகிக் கொண்டு வருகிறது.  தேர்ந்த விவசாயியின் நிலம் விவசாய அக்கறையற்ற தொழிலதிபரின் கைக்கு மாறிக் கொண்டிருக்கிறது. விளைநிலங்களில் இரசாயனம் அதிகமாக உபயோகிப்பதால் விளைச்சல் தராமல் மலட்டு நிலங்களாகி வருகிறது. ஏற்கனவே விளைச்சல் தராத களிமண் நிலங்கள் 7 பகுதிகளாக நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களைத் தக்க வைக்கும் திறன் குறைந்த நிலம் 24 இலட்சம் ஹெக்டார் கரிசல் மண்வகைகளில் சோடியம் அயனி அதிகம் இருப்பதால் அடிமண் இறுகி காணப்படும் நிலங்கள் தமிழ்நாட்டில் ஏறத்தாழ 10 இலட்சம் ஹெக்டார் . செம்மண் நிலங்களில் இரும்பு மற்றும் அலுமினிய கூழ்ம  ஆக்சைடுகளால் மண் துகள்கள் ஒன்றிணைக்கப்பட்டு மேல்மண் இறுகிவிடும் நிலையில் உள்ள பரப்பளவு  ஏறத்தாழ 4 இலட்சம் ஹெக்டார் . நெல் சாகுபடியை தொடர்ந்து செய்வதால் மண் தனது திடத் தன்மையை இழந்து வரும் நிலம் ஏறத்தாழ 25,000 ஹெக்டார் . அடிமண்ணில் பாறைகள் தென்பட்டு , மேல்மண் ஆழமற்ற நிலங்கள் ஏறத்தாழ ஒரு இலட்சம் ஹெக்டார் . 


ரூட்செட் ஓர் அறிமுகம்

ஊரக  வளர்ச்சி மற்றும் சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் (ரூட்செட் ) கிராமப்புற படித்து சுயதொழில் புரிய ஆர்வம் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்காக இலவசமாக சுயதொழில்  பயிற்சி  அளிக்கும் ஒரு நிறுவனமாகும்.  இந்த நிறுவனம் ஸ்ரீ தர்மச்தலா மஞ்சு நாதேஸ்வரா கல்வி அறக்கட்டளை , சிண்டிகேட் வங்கி , கனரா வங்கி ஆகியவை இணைந்து நடத்தும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் சுமார் 28 கிளைகள் உள்ளது. இந்த ரூட்செட்   பயிற்சி நிலையங்களின் தலைவராக Dr.டி.வீரேந்திர ஹெக்கடே , அவர்கள் உள்ளார் .

     Dr.டி.வீரேந்திர ஹெக்கடே , அவர்கள் கர்நாடகா மாநிலத்தில் பல்வேறு தொழில் மற்றும் நிறுவனங்களை செவ்வனே நடத்திவரும் ஒரு சிறந்த நிர்வாகி மட்டுமல்ல ,  ஆன்மீகம், தேசியம் , சமூகப்பார்வை நிறைந்த ஒரு இலட்சிய   புருசர், நீண்ட கால கண்ணோட்டத்தில் செயல்பட்டுவரும் ஒரு இணையில்லாத "visionary " ஆவார். குடியரசுத் தலைவரால் பாராட்டப்பட்டவர், இவரது குடும்பம் 600 வருடங்களுக்கு மேலாக செய்துவரும் ஆன்மீக சமூகப் பொதுப்பணிகள் பிரசித்தி பெற்றவை மற்றும் பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பெற்றவை.

இந்திய அரசாங்கம் மாவட்ட முதன்மை வங்கிகள் மூலம் தொடங்கியுள்ள -தொடங்கிவருகின்ற 600க்கும் அதிகமான இதுபோன்ற RSETI   பயிற்சி நிறுவனங்களுக்கும் கௌரவ தலைவராகவும்  இருந்து செயல்பட்டு வழிகாட்டிவரும் சத்தியசீலர்  Dr.டி.வீரேந்திர ஹெக்கடே அவர்  சுயதொழில் குறித்து கூறியுள்ள ஒரு சிறந்த கருத்து .

" மூன்று வருடங்கள் கல்லூரியில் படித்து  பின்னர் ஒருவரிடம் சேர்ந்து அவர் கணக்கை எழுதுவதைக் காட்டிலும்  சுயமாக நாமே ஒரு தொழில் செய்து நம் கணக்கை எழுதிக் கொள்வதே சாலச் சிறந்தது "-பத்மபூஷன் Dr.டி.வீரேந்திர ஹெக்கடே, தலைவர் , ரூட்செட்  பயிற்சி நிலையம் , தர்மச்தலா, கர்நாடகா .


ரூட்செட் மதுரை

தமிழ்நாட்டில் ரூட்செட் பயிற்சி  நிலையம் 02.02.1987 அன்று வாடிப்பட்டி அருகிலுள்ள ஆண்டிப்பட்டி பங்களா என்ற இடத்தில் தொடங்கப்பட்டது. தற்போது 19.01.1997 முதல் பெருங்குடியில் ( மதுரை விமான நிலையம் அருகில் ) இயங்கிவருகிறது. பயிற்சியின் போது  இலவச உணவு , தங்குமிடம்,    பயிற்சியாளர்களுக்கு இலவசமாக அளிக்கப் அளிக்கப்படுகிறது.

நோக்கங்கள் : சுயமாக தொழில் துவங்க ஆர்வம் உள்ள இளைநர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சுயதொழில் பயிற்சி அளித்து  அவர்கள் தொழில் தொடங்கத் தேவையான ஆக்கமும் , ஊக்கமும் அளித்தல். தொழில் தொடங்கத் தேவையான வங்கிக்கடன் மற்றும் அரசாங்க சலுகைகளைப் பெறுவதற்கான வழிமுறைகளையும் பயிற்றுவித்தல் . கிராமப்புற வளர்ச்சிக்குப் பாடுபடும் தொண்டு நிறுவனங்களுக்கு பயிற்சி அளித்தல் . சுயதொழில் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்துதல். சுயஉதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் மேலாண்மை செய்யும் மகளிர்க்கும் தொண்டு நிறுவனங்களுக்கும்  பயிற்சி அளித்தல்.

ரூட்செட்  பயிற்சி   பெறுவதற்கு வேண்டிய தகுதிகள் :ரூட்செட்டில்   பயிற்சி   பெற விரும்புகின்றவர்கள் குறைந்தது 8ம் வகுப்பிற்கு மேல் படித்தும் , வயது 18 முதல் 45க்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் .

      
 ரூட்செட்டில் நடைபெறும் பயிற்சிகள்: பால்பண்ணை , வணிக   முறையில் கோழிப்பண்ணை, தோட்டக் கலை , துல்லியப்பண்ணையம், தேனீ  வளர்ப்பு , மண்புழு உரம் தயாரித்தல் , நவீன ஆடை வடிவமைப்பு , உணவுப் பொருட்கள் தயாரித்தல், வீட்டு உபயோக இரசாயன பொருட்கள் தயாரித்தல், டிஜிட்டல் போட்டோ வீடியோ கிராபி , தங்க நகை தயாரித்தல், இலகு ரக வாகனம் ஓட்டுநர், இருசக்கர  வாகனம் பழுதுபார்த்தல் , செல்போன் பழுதுபார்த்தல், கம்ப்யூட்டர் பழுதுபார்த்தல், வீட்டு உபயோக மின்சாதனம் பழுதுபார்த்தல், ஆடைகள் நவீன இயந்திர  டிரைவாஷ்., மகளிர்க்கான அழகுக்கலை , பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் பல பயிற்சியில் நடைபெற்று வருகின்றன .

கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களை பற்றிய முழு விபரத்துடன் கீழ்க்கண்ட முகவரிக்கு சுயவிலாசம் எழுதி ரூ.5 ஸ்டாம்ப் ஓட்டிய கவர் இணைத்து அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இயக்குனர்கள் அவர்கள் , ரூட்செட் பயிற்சி நிலையம் ,
விமான நிலைய சாலை , பெருங்குடி , மதுரை -625022
தொலைபேசி எண்கள் :04522690609, 9843392246,7358556656, 9626246671