Pages

Pages

ஆசிரியர் சமர்ப்பணம்

ஆசிரியரின் சமர்ப்பணம்

        என்னை மாடித்தோட்டத்திற்கான சிந்தனையை உருவாக்கி பல்வேறு புதிய கருத்துக்களை மக்கள் மத்தியில் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்திடவும்  அது சம்பந்தமாக கூட்டத்தை  வரவழைத்து மாடித்தோட்டம் பற்றி உரையாற்ற வைத்தும் பல்வேறு கூட்டத்தை ஏற்பாடு செய்ததும்  ' மொட்டை மாடியில் தோட்டம் அமைதல் ' என்ற தலைப்பில்  இந்த புத்தகத்தை எழுதி முடிக்கக் காரணமாயிருந்தவருமான ரூட்செட் இயக்குனர் பாரதி  அவர்களுக்கு என் இதயபூர்வமான  நன்றியை  தெரிவித்துக் கொள்கிறேன்.


உயர்திரு பாரதி  அவர்கள் இந்த புத்தகத்தில் கூறப்பட்ட செய்திகள் அனைத்தையும் ரூட்செட் அலுவலகத்தின் மொட்டை மாடியில் உண்மையாக நடைமுறைப்படுத்தியோடு மட்டுமல்லாமல் செயல்படுத்தி என்னை அனுபவத்தில் முதிர்ச்சியடைய வைத்தவர் .


யாம் பெற்ற இன்பம் பெருக  இவ்வையகம் என்ற நினைப்போடு வாழ்ந்து கொண்டிருப்பவர். அவருக்கும் அவர் சார்ந்த ரூட்செட் நிறுவனத்தாருக்கும் என் நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்.


மாடியில் காய்கறித்தோட்டம் என்ற சீரிய முயற்சிக்கு மடிட்சியாவின்(MADITTSSIA ) நிர்வாக உறுப்பினர்கள் அளித்துவரும் ஆதரவிற்கு ஒருவார்த்தையில் நன்றி சொல்லி முடித்துவிட முடியாது .


அதேபோல் என்னை பல்வேறு  வகையிலும் ஊக்கப்படுத்தி வழிகாட்டி வரும் நபார்டு வங்கியின் உதவி பொதுமேலாளர் திரு. சங்கரநாராயணன் அவர்களை நினைவு கூர்வதில் பெருமைகொள்கிறேன்.


இதை பார்த்து படித்து செயல்வடிவம் கொடுக்கும் பயனாளிகளுக்கு பணிவுடன் சமர்ப்பிக்கிறேன்.